தரை துடைக்கும் தண்ணீரில் இதை சேருங்க - தரை சும்மா கண்ணாடி போல மாறும்
வீட்டை துடைக்கும் தண்ணீரில் இந்த ஒரு பொருளை சேர்த்தால் வீடு கண்ணாடி போல மாறும். இதை பதிவில் பார்க்கலாம்.
வீட்டை துடைக்கும் போது இதை சேருங்க
வீட்டை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பது அவசியம். இதற்காக வீட்டில் உள்ளவர்கள் முக்கியமாக இல்லதரிசிகள் வீட்டை ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் துடைத்து வைத்திருப்பார்கள்.
ஆனால் வெறும் தண்ணீரில் துடைக்க துடைக்க தரை நாளடைவில் அதன் பளபளப்பை இழக்கும்.
இப்படி பளபளப்பு இழந்த தரையை பசிச்சென்று துடைக்க தரை துடைக்கும் தண்ணீரில் சில பொருட்களை சேர்க்க வேண்டும். அப்படி என்ன பொருட்கள் சேர்த்தால் தரை பளபளப்பாகும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
வினிகர் - வினிகர் என்பது பழங்கள் அல்லது காய்கறிகளின் சாற்றை நொதிக்க வைப்பதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு திரவமாகும். இது ஒரு சக்திவாய்ந்த இயற்கை கிருமிநாசினிஎனப்படுகின்றது.
எனவே ஒரு வாளி தண்ணீரில் அரை கப் வினிகர் சேர்த்து தரையைத் துடைத்தால், கிருமிகள் அழிந்து தரை பளபளப்பாக மாறும். நீங்கள் வெள்ளை வினிகர் பயன்படுத்தலாம். மேலும், இது வீட்டில் துர்நாற்றத்தை அகற்றவும் உதவும்.
பேக்கிங் சோடா - பேக்கிங் சோடா என்பது சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது, இது சமையலில் புளிப்பேற்றியாகப் பயன்படுத்துகிறார்கள்.
பேக்கிங் சோடா ஒரு சிறந்த இயற்கை துர்நாற்ற நிவாரணி. இது தரையில் உள்ள கறைகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், சமையல் அறை அல்லது வாசல் பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தையும் அகற்ற உதவும்.
எனவே வீட்டை துடைக்கும் ஒரு வாளி தண்ணீரில் ஒரு மேசைக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து துடைத்தால் போதுமானதாக இருக்கும். வீட்டை துடைத்து முடிந்ததும் வீடு பளபளப்பாக மாறும்.
பாத்திரம் கழுவும் திரவம் - பாத்திரம் கழுவும் திரவத்தை சில துளிகள் மட்டுமே தண்ணீரில் சேர்த்தால், தரை மிகச் சிறப்பாக சுத்தமாகும். இது மாசு, எண்ணெய் மற்றும் ஒட்டுண்டு கறைகளை எளிதில் நீக்கி, தரைக்கு பிரகாசத்தை அளிக்கிறது.
இதன் மூலம் உண்டாகும் மிக மெல்லிய வாசனை நமக்கு ஒரு நல்ல நேர்மறை எணணங்களை கொண்டு வரும்.
இந்த மூன்று பொருட்களையும் அளவுக்கு மீறாமல் பயன்படுத்துவது அவசியம். குறிப்பாக வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒரே நேரத்தில் சேர்க்க வேண்டாம். தனித்தனியாகப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும், மர தளபாடங்கள் அல்லது மார்பிள் தரைக்கு முன் ஒரு சிறிய பகுதியில் பரிசோதனை செய்வது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
