டீ-யில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
நீங்கள் பருகும் டீ-யில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
டீ-யில் நெய்
காலையில் எழும்பியதும் சில நபர்களுக்கு காஃபி அல்லது டீ நிச்சயம் குடித்தே ஆக வேண்டும். ஏனெனில் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இது காரணம் என்று தங்களது பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால் காலையில் நீங்கள் குடிக்கும் காபி அல்லது டீ-யில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பது பிரபலங்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் விரும்பும் ஒரு ஹேக் ஆகும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் தங்கள் சாயில் நெய் சேர்ப்பது, ஆரோக்கிய நன்மை இருப்பதாக கூறுகினற்னர்.
நொய்டா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டலின் (NIIMS) உணவியல் நிபுணரான டாக்டர் ப்ரீத்தி கூறியதை இங்கு தெரிந்து கொள்வோம்.
என்ன பயன்?
நெய் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதுடன், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், வயிற்றின் பி.எச்-ஐ சமநிலைப்படுத்த உதவுகிறது என்று கூறியுள்ளார்.
குறிப்பாக தேநீரை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, சில நேரங்களில் அமிலத்தன்மை ஏற்படலாம்.
நெய் பாலின் அமில பண்புகளை எதிர்ப்பதால், வீக்கம் மற்றும் அஜீரணத்தின் அபாயத்தை குறைக்குமாம்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நெய், மேலும் மஞ்சளுடன் இணைந்தால், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வெதுவெதுப்பான நீரில் நெய்யை கலந்து பருக பரிந்துரைக்கப்படுகின்றது.
ஏனெனில் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், மளமிளக்கியான பண்புகளையும் கொண்டுள்ளதுடன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு அதிகம் பலன் அளிக்கின்றது.
யூரிக் அமில அளவைக் குறைப்பதைத் தவிர, நெய் மற்றும் பால் கலவையானது பிடிவாதமான கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. எனவே, தேநீருடன் நெய் குடிப்பது ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.
ஆனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிக உடல் எடையுடன் இருப்பவர்கள் நெய் உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
இதே போன்று கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |