இதயம் உடைந்த்துவிட்டது... பாரதிராஜா மறைவு குறித்து நடிகர் சிம்புவின் உருக்கமான பதிவு!
இயக்குநர் பாரதிராஜா நேற்று காலமான நிலையில், அவருடை நினைவுகளை என்றும் சினிமா துறையில் இருந்து அழிக்கவே முடியாது என்ற வகையில், உருக்கமான பதிவுகளுடன் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
'இயக்குநர் இமயம்' எனப் போற்றப்பட்ட பாரதிராஜா, தனது 84வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

கிராமத்து வாழ்க்கையையும், மண்ணின் மணத்தையும் மையமாகக் கொண்டு பல வெற்றிப்படங்களை இயக்கிய அவர், ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு திரையுலகில் அறிமுக வாய்ப்பை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிம்பு தனது குழந்தை பருவ புகைப்படத்துடன் பாரதி ராஜா குறித்த வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

சிம்புவின் உருக்கமான பதிவு
பாரதிராஜா பற்றி பேசி இருக்கும் அவர், "பாரதிராஜா சார் மறைவு பற்றி கேட்டு என் இதயம் உடைந்த்துவிட்டது. அவருடன் நடித்தது என் அதிர்ஷ்டம்.
அந்த நினைவுகள் எப்போதும் இருக்கும்." "அவரது கதை சொல்லும் விதத்தால் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தவர். அவரது குடும்பம், நண்பர்கள் என எல்லோருக்கும் என் இரங்கல்கள். Rest in peace sir" என சிம்பு கூறியுள்ளார்.
Heartbroken to hear about the passing of Bharathiraja sir.
— Silambarasan TR (@SilambarasanTR_) June 10, 2026
I was fortunate to work with him and will always cherish those memories. His warmth, simplicity and passion for cinema touched everyone around him.
He inspired generations through his storytelling, and his legacy will… pic.twitter.com/MxtftONvXw
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |