Photo Album: சிக்ஸ் பேக் வைத்து மிரட்டும் அட்லீ பட நடிகை- ஒற்றை புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை வாமிகா கேபியின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வாமிகா கேபி
பாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் தான் நடிகை வாமிகா கேபி.
இவர் தமிழில் வெளிவந்த “மாலை நேரத்து மயக்கம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இருந்த போதிலும் இவர், நடிப்பில் கடந்த 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவந்த திரைப்படம் “பேபி ஜான்” திரைப்படம் வெளியானது. தமிழில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் வாமிகா கேபி நடித்திருந்தார்.
சிக்ஸ் பேக்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாமிகா கேபி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் வாமிகாவிற்கு உள்ள சிக்ஸ் பேக்கை கண்டு ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். அத்துடன் அவரின் டயட் பிளான் பற்றிய கேள்விகளும் எழுந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |