பெண் ரசிகையை தாறு மாறாக கிழித்து தொங்க விட்ட விஜயலட்சுமி...!
நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவரை விளாசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை விஜயலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பரிட்சயமானவர்.
சமீபத்தில் ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார்.
சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் ஒரு வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு ஒரு பெண் ” இந்த ஆட்டம் உனக்கு தேவையா ஒரு அம்மாவா இருக்க” என்று கமென்ட் செய்த, அந்த பெண்ணை விஜயலட்சுமி திட்டியுள்ளார்.
பதிலடி கொடுத்த விஜயலட்சுமி
அம்மாவானால் மூலைல உக்காந்து ஐயோ என் லைஃப் முடிஞ்சு போச்சுன்னு வருத்தப்படனுமா? நீ வேணும்னா வருத்தப்படு உனக்கு சிலை வைப்பாங்க.
இது என் லைஃப் என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன் உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ வைத்துக் கொள்ளவும் என்று சரமாரியாக பதிலடி விளாசியுள்ளார்.
அவரின் இந்த பதிவு இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.