சென்னை 28 பட ஹீரோயினா இது? விஜயலட்சுமியின் புதிய லுக் பார்த்து வியந்த ரசிகர்கள்!
சென்னை 28 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், படு கிளாமரான உடையில், அசத்தல் போட்டோ ஷுட் நடத்தி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை விஜயலட்சுமி

தமிழ் சினிமாவில் ‘சென்னை 28’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘கற்றது களவு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்
திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பெரோஸ் முகமதுவை காதலித்த விஜயலட்சுமி, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய விஜயலட்சுமி, திரைத்துறையில் இருந்து ஒரு கட்டத்தில் விலகினார்.
கணவர் பெரோஸ் மற்றும் மகன் நிலனுடன் குடும்ப வாழ்க்கையை கவனித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் சமையல், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான வீடியோக்களை தனது குரலில் கருத்துகளுடன் பகிர்ந்து வருகிறார்.

ஓணம் ஸ்பெஷல் போட்டோ ஷூட்

இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாரம்பரியத் தோற்றத்தையும் நவீன ஸ்டைலையும் கலந்து உருவாக்கப்பட்ட உடையில், அழகான நகைகள் அணிந்து, தலையில் மல்லிகைப் பூக்களுடன் விஜயலட்சுமி கொடுத்துள்ள பல்வேறு போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக 43 வயதிலும் இளமை மாறாத தோற்றத்துடன் அவர் காட்சியளிப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |