86 கிலோவில் இருந்த வித்யு ராமன் 66 கிலோவாக மாறியது எப்படி? ஆரோக்கியமான குறிப்புகள்
துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகை வித்யு ராமன் தன்னுடைய எடையில் 20 கிலோ குறைத்துள்ளார். அவர் என்னென்ன ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
நீதானே என் பொன்வசந்தம், வீரம், வேதாளம், தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வித்யு ராமன்.
இவர், சினிமாவுக்கு நுழைந்த ஆரம்ப காலங்களில் இவரின் தோற்றம் திரைப்படங்களிலேயே நகைச்சுவை என்ற பெயரில் வரம்பு மீறி விமர்சிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் வித்யு ராமன் அதை பொருட்படுத்தவில்லை எனினும் சில வருடங்கள் முயற்சி செய்து தன்னுடைய எடையில் 20 கிலோ வரை குறைத்து சிலிம்மாக மாறினார். இதனை பார்த்த ரசிகர்கள் இது வித்யு ராமனா என ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் எடையைக் குறைத்திருந்தார்.
அப்போது அவர் சமூக வலைதளத்தில் வைரலானது. பலரும் வித்யு ராமனின் தோற்றத்தை கண்டு வியந்தனர்.
20 கிலோ எடை குறைத்தது எப்படி?
எடை குறைப்பு தொடர்பில் பேட்டியில் பேசிய வித்யு ராமன், “ என்னை குண்டு குண்டு என கூப்பிடும் பொழுது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறுவயதில் இருந்தே என்னை அப்படி தான் அழைத்தார்கள். கடந்த 2019ல் உடல் எடை இழப்பு பயணத்தை ஆரம்பித்தேன். கொடைக்கானலில் நான் குடும்பத்துடன் சிறிய மலையேற்றம் சென்ற போது மூச்சு வாங்கியது, முட்டி வலி, முதுகு வலி ஏற்பட்டது.
அந்த விடயம், எனக்கு அசிங்கமாக இருந்தது. ஏனெனின் வயதானவர்கள் கூட எளிதில் மலையேறி விடுவார்கள். அப்போது தான் நான் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவில்லை என புரிந்தது.
கேரளா சென்ற ஆயுர்வேத முறைப்படி, உடலில் உள்ள நச்சுகளை நீக்கினேன். அதன் பின்னர் கார்போஹைட்ரேட் இல்லாத உணவுமுறையை பின்பற்றினேன். அரிசி, மாவு கொண்ட உணவுகள், சர்க்கரை உணவுகளை தவிர்த்து விட்டு தினை, புரதம் நிறைந்த அசைவ உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகளை அதிகமாக சாப்பிட ஆரம்பித்தேன்.
எடை அதுவாக குறைந்து விட்டது. பட்டினியாக இருந்து உடல் எடையைக் குறைக்க முடியாது. அதே சமயம், பட்டினியாக இருக்கும் பொழுது ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
கடந்த 2019ஆம் ஆண்டு 86 கிலோ இருந்த நான் 2021 செப்டம்பரில் திருமணத்திற்கு முன்பாக 66 கிலோவில் இருந்தேன். அதாவது 2 வருடத்தில் 20 கிலோ எடை குறைத்து விட்டேன். என்னுடைய எடை குறைப்பு பயணம் 80% உணவுமுறை மாற்றம், 20 % உடற்பயிற்சி செய்வது தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |