பிக்பாஸ் தொகுப்பாளருக்கு விசித்ரா கொடுக்கும் advise- விஜய் சேதுபதி இதை ஏற்பாரா?
பிக்பாஸ் தொகுப்பாளர்- விஜய் சேதுபதிக்கு நடிகை விசித்திரா ஒரு சில அறிவுரை வழங்கியுள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 7 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது 8 ஆவது சீசனில் நுழைந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 ற்கு தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளது.
இது தொடர்பான அப்டேட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக பிரபல தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், பிக்பாஸ் 7 ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நடிகை விசித்திரா விஜய் சேதுபதிக்கு ஒரு சில ஆலோசணை வழங்கியுள்ளார்.
விஜய் சேதுபதிக்கு கூறும் அறிவுரை
இது குறித்து பேசிய விசித்திரா, “ கமல்ஹாசன் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா? என்பது சரியாக தெரியவில்லை. கமல் சார் செட்டிற்கு வந்தவுடன் அனைவரும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். அவரே சமூக வலைத்தளங்களில் பாரிய சர்ச்சையை சந்தித்தார்.
கடந்த சீசனில் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது தான் நிகழ்ச்சி இப்படி சென்றதற்கு முக்கிய காரணம். சினிமா வாய்ப்பு இல்லாத போது பிக்பாஸ் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது மகிழ்ச்சியை கொடுத்தாலும் அதே போல் அவரும் நல்ல மனநிலையுடன் நிகழ்ச்சியை கொண்டு செல்ல வேண்டும்.
விஜய் சேதுபதி அவருடைய இன்டர்வியூக்களில் மெச்சூர்டாக பேசுவதை பார்த்திருக்கிறேன். அது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனை போலவே மிகச்சிறப்பாக நடத்துவார் என நம்புவோம்..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |