முத்து படத்தில் ரசிகர்களை கிரங்கடித்த நடிகை!! சமீபத்தில் வெளியான புகைப்படம்
90களில் திரையுலகை கலக்கி வந்த நடிகை விசித்ரா, சமீபத்தில் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை விசித்ரா, தற்போது அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் உண்டு.
கடைசியாக 2002ம் ஆண்டு இரவு பாடகன் என்ற படத்தில் நடித்ததுடன் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.
கவர்ச்சி நடிகை மட்டுமன்றி நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து பலரது மனங்களை வென்றவர் விசித்ரா.
தொடர்ந்து 2019ம் ராசாத்தி தொடர் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார், மலையாளத்தில் கல்யாணி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
மேலும் இணையத்திலும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
சமீபத்தில் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடிய விசித்ரா தனது பிறந்த நாள் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
