பிரபல தமிழ் நடிகை வரலட்சுமிக்கு கொரோனா தொற்று
தமிழ் சினிமாவின் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர், சமீபத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலம் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
எனவே தயவு செய்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவரையும் முககவசம் அணியும்படி நடிகர்கள் வலியுறுத்த வேண்டும்.
ஏனென்றால் நடிகர்கள் ஆகிய நாம் படப்பிடிப்பின் போது முககவசம் அணிய முடியாது. சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள், முக கவசம் அணியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
Covid Positive..inspite of all precautions..actors plz start insisting on masking up the entire crew bcos we as actors cant wear masks..
— ????????? ??????????? (@varusarath5) July 17, 2022
Those who have met me or been in contact with me plz watch out for symptoms and get checked..
Plz be careful and mask up..covid is still here pic.twitter.com/MyegWOSQ5a