திருமண நாளுக்கு இப்படியொரு பரிசா? வரலட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் நிக்கோலாய்!
நடிகை வரலட்சுமி தனது முதலாம் ஆண்டு திருமண நாளில், தனது காதல் கணவர் தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காணொளியை தற்போது வெளியிட்டுள்ளார்.குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
நடிகை வரலட்சுமி
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்பதித்தார்.
அவரின் தனித்துவமான மற்றும் யதார்த்மான நடிப்பால் முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தால், அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
ஹீரோயினாக மட்டுமன்றி வில்லி, குணச்சித்திரம் என தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை வரட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக தாய்லாந்தில் நடைபெற்றது.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி தன் காதல் கணவர் நிக்கோலாய் சச்தேவ் முதலாம் ஆண்டு திருமண நாளில், சர்ப்ரைஸ் கொடுத்த காட்சியடங்கிய காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்த வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |