43 வயதாகும் வனிதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வனிதாவின் புகைப்படமும், அவரது சொத்து மதிப்பும் வைரலாகி வருகின்றது.
நடிகை வனிதா
தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
இந்த இரு குழந்தைகளில் ஜோவிகா வனிதாவுடனும், ஸ்ரீஹரி தாத்தா விஜயகுமார் மற்றும் தந்தை ஆகாஷ் உடன் வாழ்ந்து வருகின்றார்.
பிறந்தநாள் கொண்டாடும் வனிதா
இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். மகள் ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், தனது இளைய மகளுடன் பிறந்தநாள் கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வனிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது சொத்து மதிப்பும் தற்போது வைரலாகி வருகின்றது. ஏற்கனவே இவரது சொத்து மதிப்பு வெளியான நிலையில், இன்று பிறந்தநாளானதால் இவரது சொத்து மதிப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
நடிகை வனிதா வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து தனது தொழிலும் வெற்றி பெற்று வருகின்றார். குழந்தைகளுடன் தனிஆளாக இருக்கும் இவர் சினிமா, சீரியல், பிக்பாஸ், யூடியூப் சேனல், பிசினஸ் என்று கலக்கி வருகின்றார்.
மகள் ஜோவிகாவை நடிகையாக்கும் முயற்சியில் இருக்கும் வனிதாவின் சொத்து மதிப்பு 7.3 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |