கே.எப்.சி-யில் காக்கா கறியா? புகைப்படத்தை வெளியிட்டு கொந்தளித்த வனிதா
நடிகை வனிதா கே எஃப் சி சிக்கன் சாப்பிட சென்ற போது தனக்கு கொடுக்கப்பட்ட உணவினை புகைப்படமாக வெளியிட்டு காக்கா கறியா என்று கொந்தளித்துள்ளார்.
நடிகை வனிதா
நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா, சினிமா மட்டுமின்றி சீரியலிலும் நடித்து வந்தார். ஆனால் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியே.
ஆம் பிரபல ரிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் கலந்து கொண்டு தனது தில்லாலங்கடி வேலையை காட்டினார்.
இவரது மகள்கள் உள்ளே இவரைப் பார்க்க வந்த பின்பு தான் ரசிகர்களுக்கு வனிதாவின் மேல் மரியாதை அதிகமானது. ஆனால் பிக்பாஸிற்கு பின்பு பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தற்போது தனது வேலைகளை செய்து வருகின்றார்.
சமீபத்தில் பிக்பாஸ் சீசனில் வெற்றிபெற்ற அசீமை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். இந்நிலையில் வனிதா, தற்போது கே.எஃப்.சி-யில் ஆசை ஆசையாய் சாப்பிட சென்று அப்செட் ஆனதாக பதிவிட்டுள்ளார்.
கே எஃப் சி-யில் நடந்தது என்ன?
ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்றபோது அங்கு தனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக வனிதா புகார் அளித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டில், கஸ்டமரின் செயல்பாடும் மோசமாக இருந்தது மட்டுமின்றி, தனக்கு தரப்பட்ட சிக்கன் பீஸ் மிகவும் சின்னதாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் உலகத்தில் இம்மாதிரியான சிறிய சிக்கனை பார்த்ததுண்டா? இது சிக்கனா அல்லது காக்காவா என்று கொந்தளித்துள்ளார்.
இதனை அவதானித்த கே எஃப் சி நிறுவனம் தங்களுக்கு இப்படியொரு அனுபவத்தை கொடுத்ததற்காக வருந்துகிறோம் என்று வருத்தம் தெரிவித்துள்ளது.