முதல்காதலை கூறினால் தமிழ்நாடு அதிருமா? வனிதா உடைத்த சீக்ரெட்
நடிகை வனிதா தனது முதல் காதலைக் கூறினால் தமிழ்நாடே அதிரும் என்று வார்த்தையை விட்ட நிலையில் ரசிகர்கள் குழப்பத்தில் காணப்படுகின்றனர்.
நடிகை வனிதா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்துக்கண்ணுவிற்கு பிறந்த குழந்தைகள் தான் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர் ஆவார்.
பின்பு விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இருக்கும் நிலையில், இவர்களும் சினிமா பிரபலங்களாக இருக்கின்றனர்.
நடிகை வனிதா தனது தந்தையுடன் சண்டையிட்டு, இரண்டு திருமணத்திற்கு மேல் செய்தும் தனியாக மகளுடன் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றில் முதல் காதல் குறித்த கேள்விக்கு அளித்துள்ள பதில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

தமிழகமே அதிரும் முதல் காதல்
நடிகை வனிதா தனது முதல் காதல் குறித்து பேசுகையில், தான் முதன்முதலில் யாரை காதலித்தேன் என்றும், தன்னை யார் முதலில் காதலித்தார் என்பதை வெளியே சொல்ல முடியாது.
அவ்வாறு நான் அந்த ரகசியத்தினை உடைத்தால், தமிழகமே அதிருமே என்றும் அதனால் அமைதியாக இருப்பதே நல்லது என்று கூறியுள்ளார்.
மேலும் குறித்த ரகசியம் சம்பந்தப்பட்ட நபர் என எங்கள் இரண்டு பேருக்கும் நன்றாக தெரியும் என்று ரகசியத்துடன் பேட்டியை முடித்துள்ளார்.

வனிதா கூறிய வார்த்தையை பிடித்துக் கொண்ட ரசிகர்கள், ஒருவேலை இன்றைய முதல்வர் விஜய்யாக இருக்குமோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏனெனில் வனிதா தான் முதல் படத்தில் நடிகர் விஜய்யுடன் தான் நடித்துள்ளார். அப்பொழுது அவர் மீது காதல் ஏற்பட்டிருக்கலாம்... தற்போது முதல்வராக இருப்பதால் தான் காதலை உடைத்தால் தமிழகமே அதிரும் என்று வனிதா கூறியிருப்பார் என்று கதை கூற ஆரம்பித்துள்ளனர்.