கல்யாண கோலத்தில் காரில் இருக்கும் வாணி போஜன்! திடீர் திருமணமா?
நடிகை வாணி போஜன் திருமணக் கோலத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
அதில் தனது வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவருக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.
அதில் அவர் திருமண கோலத்தில் இருந்ததைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் தான் அது விளம்பர ஷூட்டிங்கிற்காக போட்ட கெட் அப் என தெரியவந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
