சிவப்பு சேலையில் அழகு பதுமையாகவே மாறிய வாணி போஜன்! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை வாணி போஜன் சிவப்பு நிற சேலையில் அழகு பதுமையாகவே மாறி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
வாணி போஜன்
சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகை தான் வாணி போஜன்.
இவர் பிரபல தொலைக்காட்கியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் அறிமுகமாகி இல்லத்தரசிகள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர்.இந்த சீரியலின் பின்னர் இவரை சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
அதனை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜனுக்கு 2020-ஆம் ஆண்டு 'ஓ மை கடவுளே' திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
இந்த திரைப்படம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரும் திரும்பு முனையாகஅமைந்தது. அதனை தொடர்ந்து 'லாக் அப்', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்', 'மிரள்', 'அஞ்சாமை' என தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறினார்.
சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர் சிவப்பு நிற சேலையில் கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் செம ஹொம்லியாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |