நடிகை ஊர்வசியின் மகளா இது? ஹீரோயினை மிஞ்சிய அழகில் வெளியான முதல் புகைப்படம்
நடிகை ஊர்வசி முதன்முதலாக தனது மகளுடன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை ஊர்வசி
குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து, பின்பு தமிழில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமானாவர் தான் நடிகை ஊர்வசி.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமானார்.
90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
குடும்பம்
2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்த ஊர்வசிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.
பின்பு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2008ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து, பின்பு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான சிவபிரசாத்தை மறுமணம் செய்து கொண்டார்.
46 வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது இரண்டாவது கணவர் மற்றும் மகன், மகளுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயாராகிவிட்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |