சினிமாவை விட்டு விலகுகிறாரா நடிகை த்ரிஷா - புதிய தகவல்
நடிகை த்ரிஷா சர்ச்சைகளுக மத்தியில் தற்போது சினிமாவை விட்டு விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை த்ரிஷா
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருபவர் திரிஷா. முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது.
நடிகர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதை அடுத்து நடிகர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டனர்.
இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக கலந்துகொண்டதற்கு த்ரிஷாவை விமர்சித்து இருந்தார்.
இதற்கு நடிகை த்ரிஷா கண்டனமும் தெரிவித்து இருந்தார். இப்படி சமூக வலைத்தளத்தில் த்ரிவிற்கு பல சர்ச்சைகள் போய்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் நடிகை த்ரிஷா சினிமாவை விட்டு விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

சினிமாவை விட்டு விலகுகிறாரா?
42 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா திடீரென சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல் இணையத்தில் பரவி உள்ளது. இவர் சினிமாத்துறையில் அறிமுகமானதில் இருந்து இதுவரை 75 படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக புது படங்கள் எதிலும் திரிஷா ஒப்பந்தமாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் சினிமாவிலிருந்து விலகப்போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |