ஜனநாயகன் படம் பார்க்க ஸ்டைலாக வந்த நடிகை த்ரிஷா... வைரலாகும் புகைப்படம்
ஜன நாயகன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை த்ரிஷா திரையரங்கில் சென்று படம் பார்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று வெளியாகியுள்ள நிலையில், பல பிரபலங்கள், தவெக கட்சியின் அமைச்சர்கள் முதல் நாள் முதல் காட்சியினை பார்த்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் ரோகினி திரையரங்கில் ஜனநாயகன் படத்தினை பார்க்க வந்துள்ளார். விஜய்யுடன் ஐந்து படங்கள் வரை நடித்துள்ளார்.

த்ரிஷா, விஜய் இருவருக்குமான உறவு குறித்து கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் நடிகை த்ரிஷா. ஆனால் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பழக்கம் குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை.
இந்நிலையில் த்ரிஷா விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தினை பார்க்க வந்துள்ளது கடும் பேச்சுபொருளாக மாறியுள்ளது.

ரசிகர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் என அனைவருக்கு இப்படம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் வைத்து பலரும் தேம்பி தேம்பி அழவும் செய்துள்ளனர்.
ஜனநாயகன் படத்தில் விஜய்யை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் என்று டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளதுடன், அவர் சட்டமன்றத்தில் செய்த சைகையும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |