லியோ படத்திற்கு நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
லியோ
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் லியோ.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நடிகை திரிஷா.
சில ஆண்டுகள் வெற்றி படம் கொடுக்காமல் இருந்த திரிஷாவிற்கு 96 திரைப்படம் மீண்டும் கம் பேக் கொடுத்தது. தொடர்ந்து இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
தற்போது அஜித்துடன் விடாமுயற்சி, விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துவரும் திரிஷா, விஜய் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படம் பல சர்ச்சையை கடந்து வருகின்றது.
திரிஷா சம்பளம்
லியோ படத்தில் திரிஷாவை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கிட்டதட்ட ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், இதில் திரிஷாவிற்கு மட்டும் 5 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் அடுத்ததாக மணி ரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் கமல் 234 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.
இப்படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை திரிஷா சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |