Photo Album: பொறுமையின் சிகரமான த்ரிஷா போட்ட பதிவால் குஷியான ரசிகர்கள்- வைரலாகும் படங்கள்
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவின் பதிவு ரசிகர்கள் பலரின் நெஞ்சங்களை தொட்டுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் நடிகை திரிஷா.
இவர் தற்பொழுது அஜித் நடிக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.
திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசன் அண்மையில் வெளியாகி பெறும் வரவேற்பை ஏற்படுத்தியதுடன் சமீபத்தில் படப்பிடிப்பின் போது அஜித்துடன் எடுக்கப்பட்ட படங்களும் இணையத்தில் வைரலானது.
வைரலாகும் படங்கள்
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் நடிகை திரிஷா கலந்துக் கொண்டார். இதன்போது திரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வெள்ளை நிற ஆடையில் மிக அழகாகவும் சாந்தமாகவும் காட்சி அளிக்கும் படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வரும் த்ரிஷா தக் லைஃப், ஐடெண்ட்டிடி, சூர்யா 45, ராம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |