My forever Valentine... காதலர் தினத்தில் நடிகை த்ரிஷா வெளியிட்ட காணொளி!
நடிகை த்ரிஷா தனது புது valentine என குறிப்பிட்டு காணொளியுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் மின்னல் வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து கில்லி, சாமி, ஆறு உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தற்போது அஜித், திரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து த்ரிஷ் மற்றும் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகை த்ரிஷாவின் zorro என்கிற வளர்ப்பு நாய் மரணமடைந்தது. தனது நாய் இறந்தது குறித்து மிகவும் சோகமான பதிவை த்ரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.குறித்த பதிவு அண்மையில் இணையத்தை ஆக்கிரமித்தது.
இந்நிலையில், தற்போது தனது புதிய நாய் குட்டியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார். இந்த நாய் குட்டிக்கு Izzy என பெயர் சூட்டியுள்ளாராம்.
இந்த பதிவில் "My forever Valentine" என்றும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். காதலர் தினத்தில் த்ரிஷா வெளியிட்ட இந்த பதிவு இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |