நடிகை திரிஷாவா இது? சினிமாவிற்கு வரும் முன்னே எப்படியிருந்திருக்கார்னு பாருங்க! வைரல் போட்டோ
நடிகை த்ரிஷாவின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
1999ம் ஆண்டு வெளியான ஜோடி என்ற படத்தில், அப்படத்தின் நாயகியின் தோழியாக சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா.
இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ள இவர், தனி ஒரு நாயகியாகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் த்ரிஷா, தற்போது விளம்பரம், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது 38 வயதாகவும் நடிகை த்ரிஷா, அன்று பார்த்ததுபோல் இன்றுவரை இளம் தோற்றத்துடனையே காட்சியளிக்கிறார். இந்நிலையில், த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், தனது இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
