த்ரிஷாவின் உடல்நலத்தில் நடந்தது என்ன? புதிய பதிவால் கவலையில் ரசிகர்கள்
தற்போது த்ரிஷா தான் நன்றாக இல்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா
தற்போது த்ரிஷா மற்றும் விஜய் குறித்து பல சர்ச்சைகள் வைரலாகி வருகின்றது. சுமார் 25 ஆண்டு காலமாக த்ரிஷா தமிழ் சினிமாவில் ஒரு பிரபல கதாநாயகியாக வலம்வந்து கொண்டு இருக்கிறார்.
தற்போது மே 14ம் திகதி இவருடைய கருப்பு திரைப்படம் வெளியாக இருக்கிறது. த்ரிஷா சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் பலர் வதந்திகளை கிளப்பி வந்தனர்.
இதற்கு த்ரிஷா தக்க பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் அவர் எதை இன்டாவில் பதிவு செய்தாலும் அதை மக்கள் ஆராய்ந்து ட்ரெண் செய்து வருவார்கள். இந்த நிலையில் தற்போது த்ரிஷா பகிர்ந்திருக்கும் விடயம் மக்களை குழப்பி உள்ளது.

புலம்பல்
நடிகை த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் சர்சையில் மாட்டிக்கொண்டதால் மக்கள் இவரின் புதிய அப்டேட்டுகளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
இதனால் த்ரிஷா எது செய்தாலும் அதை ரசிகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் த்ரிஷா தற்போது இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

அந்த போஸ்டில் ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும். அப்படி கணக்கு பார்த்தால், 2062 இல் தான் நான் நன்றாக உணர்வேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவிற்கு என்னாச்சு? அவர் தூக்கமின்மையால் கஷ்டபடுகிறாரா? த்ரிஷா ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறார்.
அதில் இருந்து மீண்டு த்ரிஷா நன்றாக தூங்க வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |