Viral Video:துளியும் மேக்கப் இல்லாமல் கையில் நாயுடன் த்ரிஷா... என்ன செய்ராங்க?
நடிகை த்ரிஷா தனது பிட்னஸ்க்காக உடற்பயிற்ச்சி செய்யும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா எப்போதும் தமிழ் சினிமாவில் தன்னுடைய பிட்னஸ் அழகிற்கு பிரபலமாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் கையில் நாய்க்குட்டியை வைத்துக்கொண்டு உடற்பயிற்ச்சி செய்யும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. தற்போது த்ரிஷாவிற்கு 43 வயதாகிறது அனால் அவர் இப்போதும் தன்னுடைய இளமையை பராமரித்து வருகிறார்.
ஜோடி படத்தில் தோழியாக நடித்த த்ரிஷா லேசா லேசா படத்திலும் தோழியாக நடிக்க சென்று ஹீரோயினாக மாறினார்.

த்ரிஷாவின் உயற்பயிற்ச்சி
காணொளியில் த்ரிஷா செய்யும் உடற்பயிற்ச்சியானது ஸ்குவாட்ஸ் பயிற்சி ஆகும். இது உடலுக்கு மிகவும் நல்ல உடற்பயிற்ச்சி. ஸ்குவாட்ஸ் பயிற்சிகளை ஆண், பெண் இருவருமே செய்யலாம்.
நம்முடைய உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வலிமைப்படுத்த ஒவ்வொரு வகை பயிற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் ஒட்டுமொத்த உடலையும் ஒரே சமயத்தில் வலிமைப்படுத்த சிறந்த பயிற்சி என்றால் அது ஸ்குவாட்ஸ் என்று சொல்லலாம்.

ஹார்மோன்களை சமநிலையில் வைத்தல், இன்சுலின் சென்சிடிவிட்டியை தூண்டுதல், உடலின் சரியான வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஸ்குவாட்ஸ் மிகச்சிறந்த பயிற்சியாக இருக்கும்.
இதை வீட்டில் பெல்கனியில் பெட்ரூமில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். இதை தான் த்ரிஷாவும் பின்பற்றுகிறார்.
அதை அவர் தன்னுடைய நாயை தூக்கி மிகவும் க்யூட்டாக செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |