"என்னை கொல்ல சதி திட்டம்" - பிரபல நடிகை தனுஸ்ரீ மீண்டும் அதிர்ச்சி புகார்!
தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடித்திருந்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில், மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்திருந்தவர் தான் தனுஸ்ரீ தத்தா.
இவர், இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். ஏற்கனவே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்தி நடிகர் நானே படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் மீது, மீடூ- வில் தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்.
மேலும், இந்தி திரை உலக மாபியாக்கள் பல வழிகளில் தனக்கு தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு நானே படேகர் காரணம் என்றும் கூறினார்.

இந்த நிலையில், தனுஸ்ரீ தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மீண்டும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “என்னை கொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடந்தன. விபத்து ஏற்படுத்தும் வகையில் காரின் பிரேக்குகள் பல முறை சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், ஒரு முறை விபத்தில் சிக்கி காயம் அடைந்தேன். எனக்கு விஷம் கொடுக்கவும் முயற்சிகள் நடந்தன” என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.