நான் என்ன குத்தாட்ட நடிகையா? வருத்ததில் தமன்னா... காரணம் என்ன?
நடிகை தமன்னா திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு அதிக வாய்ப்புகள் வருவதால் மனமுடைந்து போய் இருப்பதாக அவர் கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது மொத்த நடிப்பு திறமையையும் வெளிக்காட்டி சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
அதனை தொடர்ந்து தமன்னாவுக்கு பல மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. தமிழிலும் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
தமிழில் அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்ததுடன் அதில் தமன்னாவின் நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.
தமன்னா ஜெயிலர் படத்தில் 'காவாலயா' பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான 'ஸ்த்ரி 2' படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாறி குவித்தது.
இதனால் சினிமா வட்டாரங்களில் தடன்னாவின் நடனமும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என கூறப்பட்டு வந்தது.
மேலும் சமீபத்தில் ஸ்திரி 2 என்ற இந்தி படத்திலும் ஆஜ் கிராத் என்ற குத்து பாடலில் தமன்னா நடனமாடி இருந்தார். இந்த திரைப்படமும் வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்நிலையில் தமன்னாவின் நடனம் இடம்பெற்றால் அந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற கருத்து நிலவுகின்றது. அதனால் அனைவரும் தமன்னாவிடம் அவர்களது படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிக்கொடுக்குமாறு கேட்கின்றனராம்.
அதனால் தமன்னா நான் நடனமாட மட்டும்தான் தேவையா? நான் நடனமாடிய ஒரு பாடல் படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.
ஆனால் அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் அடுத்தடுத்த படங்களில் என்னை நடனமாட சொல்கின்றார்கள்.
ஜெயிலர் ரஜினி படம் என்பதனால் முதலில் நடனம் ஆடி இருந்தேன். மேலும் படத்தின் ஸ்திரி 2 படத்தின் இயக்குனர் அமல் கௌசி எனது நண்பர் என்பதால் அவர் கேட்டதும் மறுக்க முடியாது என்ற காரணத்ததால் ஒத்துக்கொண்டேன்.
ஆனால் அதனை தொடர்ந்து செய்வதற்கு நான் ஒன்றும் குத்தாட்ட நடிகை இல்லை ”என கூறியுள்ளதுடன் இவ்வாறு கேட்பவர்களால் வருத்தம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகின்றது. ஆனால் இதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பது கேள்விகுறியே.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |