உறையவைக்கும் அழகில் தமன்னா வெளியிட்ட புதிய காணொளி... வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நடிகை தமன்னா ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை உறைய வைக்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
தமன்னா
தென்னிந்திய நடிகைகளுள் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இன்றளவும் பிஸியான நடிகையாக வலம் வருகின்றார்.
ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் ‘கேடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான தமன்னாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது.
தமிழில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘அரண்மனை 4’ படத்தில் தமன்னா நடித்திருறந்தார். அவர் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ படம் வசூலில் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
தமன்னாவும் ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் கடந்த 2023 முதல் காதலித்து வந்த நிலையில் இந்த ஜோடி தற்போது பிரிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் அதனைப் பொது வெளியில் அறிவிக்க விரும்பவில்லை என்றும் நண்பர்களாகத் தொடர முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
காதல் முறிவை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னாவுடன் இணைந்து பதிவிட்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். குறித்த விடயம் அண்மையில் வைரலானது.
இந்நிலையில் நடிகை தமன்னா அசரவைக்கும் ட்ரெண்டிங் உடையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
