அஜித் பட நடிகைக்கு படப்பிடிப்பில் விபத்து... பதறிய திரையுலகம்!
பாலிவுட்டில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான பஜார் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தபு. தொடர்ந்து பல்வேறு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியானார் நடிகை தபு. தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் நடிகை தபு.
தமிழில் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சினேகிதியே, டேவிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் தபு. 51 வயதான நடிகை தபு இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

காயம்
இந்நிலையில், பாலிவுட் படமான போலா படத்தில் பிஸியாக நடித்துகொண்டிருக்கிறார். அப்போது படப்பிடிப்பின் போது தபுவிற்க்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
சண்டை காட்சியின் போது, டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியது அப்போது, டிரக்கின் கண்ணாடி உடைந்து தபுவின் வலது கண்ணிற்கு மேலே பட்டுள்ளது.

சிகிச்சை
இதனால் காயம் ஏற்பட உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பெரிய அளவில் காயம் இல்லை தையல் போட தேவையில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு பின் தபு ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார்.