விமர்சனங்களை கொட்டித்தீர்க்கும் பயில்வான் வாயிலிருந்து வந்த நல்ல தகவல்.. யார் அந்த அதிர்ஷ்ட நடிகை?
விமர்சகர் பயில்வான் சுவலட்சுமி குறித்து யாமறியாத பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சுவலட்சுமி
கடந்த1994 ஆம் ஆண்டு பெங்காலியில் வெளியான “உத்தோரன்” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் தான் சுவலட்சுமி.
இதனை தொடர்ந்து மணிரட்னத்தின் மூலம் இயக்குனர் வசந்த் இயக்கிய வெளியான “ஆசை” படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே நினைத்து பார்க்க முடியாத வெற்றியை சந்தித்தார். இதனால் சுவலட்சுமிக்கு படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
அந்த காலப்பகுதியில் சுவலட்சுமி கவர்ச்சியை மறுத்து குடும்ப பாங்கான திரைப்படங்களில் மாத்திரம் நடித்து வந்தார்.
சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த சுவலட்சுமி கடந்த 2001ஆம் ஆண்டு விஞ்ஞானி ஸ்வகாடோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டு சுவிட்சர்லாந்தில் செட்டிலானார்.
பயில்வான் கூறிய தகவல்
திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கமிருந்து முற்றாக விலகிய சுவலட்சுமி குறித்து யாமறியாத பல தகவல்களை பயில்வான் முதல் தடவையாக பாராட்டி பேசியுள்ளார்.
அதன்படி, சுவலட்சுமி முன்னணியில் இருந்த காலப்பகுதியில் பல பிரபலங்கள் சுவலட்சுமியை காதலித்தார்கள். ஆனால் அவர் யாருக்கும் மயங்கவில்லை.
கதாநாயகியை கவர்ச்சியாக காட்டும் திரைபடங்களுக்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அக்காலத்தில் ஒழுக்கமாக இருந்த நடிகைகளில் சுவலட்சுமியும் ஒருவர்.” என பேசியுள்ளார்.
பயில்வான் வாயிலிருந்து இப்படி பாராட்டி வந்த செய்திகளை ரசிகர்கள் அதிர்ச்சியாக பார்த்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |