நடிகை சுனைனாவின் திருமணம் நிச்சயத்துடன் நின்றுவிட்டதா? குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகை சுனைனாவிற்கு நிச்சயம் முடிந்த நிலையில், தற்போது திருமணத்தினை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சுனைனா
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தான் சுனைனா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் வெளிநாட்டு நபர் ஒருவரை காதலித்து வருவதாக பேசப்பட்ட நிலையில், தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக கூறியிருந்தார்.

மாப்பிள்ளையின் பெயரை வெளியிடாமல் இருந்த நிலையில், அமீரகத்தை சேர்ந்த சமூக வலைதள பிரபலமான காலி் அல் அமேரியின் இஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்ட்டை ரசிகர்கள் அவதானித்தனர்.
அப்பொழுது ரசிகர்கள் சுனைனா நிச்சயம் செய்த நபர் இவர்தான் என்று உறுதி செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் கேரளாவிற்கு வந்து சுனைனாவுடன் பிறந்தநநாள் கொண்டாடினார் காலித். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகியது.

திடீர் பிரேக் அப் ஏன்?
இவர்களின் திருமண தேதியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு காலித்தை இன்ஸ்டாவில் பின்தொடர்பதை நிறுத்தியதுடன், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தினையும் நீக்கியுள்ளார்.
இதே போன்று காலித்தும் சுனைனாவை அன்ஃபாலோ செய்ததுடன், திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தினையும் நீக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாக ரசிகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இருவரும் பிரிந்துவிட்டனாரா? உண்மையில் இவர்களது திருமணம் நின்று போனதா? என்பதைக் குறித்து இருவரும் வெளிப்படையாக எந்தவொரு அறிவிப்பும் கொடுக்கவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |