அவதூறு பேச்சால் சினிமாவை இழந்த நடிகை! 30 வருடம் கழித்து கிடைத்த நீதி
அரசியல்வாதி ஒருவருடன் நடிகை சுகன்யாவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக வீரப்பன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை சுகன்யா
90களில் சினிமாவுக்கு முன்னணி நடிகைளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சுகன்யா.
இதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி இருந்தார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடு காரணமாக பிரிவை சந்தித்தது.
சூழல் இப்படி இருக்க அரசியல் புள்ளி ஒருவருடன் சுகன்யாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மறைந்த சந்தன கடத்தல் வீரப்பன் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

சுகன்யா நடிப்பதற்கு மன்பே பரதநாட்டியத்தில் மிகவும் பிரபலமானவர். இதனால் சினிமாவில் இவரின் நடிப்பு பீக்கில் இருந்தது.
ஆனால் திருமணமாகிய பின்னர் சுகன்யாவை சினிமாவில் பார்க்க முடியவில்லை. கணவன், மனைவிக்குள் பிரச்னை வந்ததால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்.
இதன் பின்னர் சுகன்யா யாரையும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

இதற்கிடையே 90களில் சத்தியமங்கலம் வன பகுதிகளில் தனி அரசாங்கமே நடத்திக்கொண்டிருத சந்தன கடத்தல் வீரப்பனை; மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஒருமுறை (1996ஆம் ஆண்டு) பேட்டியெடுத்தார்.
அந்த பேட்டியில் பேசிய வீரப்பன் 'முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மகனுக்கும், சுகன்யாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது' என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.

நீதிமன்றம் அதிரடி
வீரப்பன் சுகன்யா பற்றி பேசிய அந்த பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுகன்யா 'அந்தப் பேட்டியால் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் வந்துவிட்டது. எனது சினிமா வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டன.
மன உளைச்சலும் ஏற்பட்டது. எனவே எனக்கு பத்து லட்சம் ரூபாய் சன் டிவி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் 'சுகன்யாவுக்கு சன் டிவி தரப்பிலிருந்து 10 லட்சத்து 500 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |