சுகன்யா மகளா இது? ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் புகைப்படம்
தமிழ் திரையுலகில் 90களில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சுகன்யா.
பாரதிராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுகன்யா.
தன்னுடைய திறமையால் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் சின்னத்திரை தொடரான ஆனந்தம் மூலம் மீண்டும் பிரபலமானார்.
நடிகை என்பதையும் தாண்டி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
ஆனால் ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர், இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
தற்போது சுகன்யாவின் மகள் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது, கதாநாயகி மாதிரி இருக்காங்களே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.