கதறும் நடிகை... சுதா சந்திரன் வீட்டில் ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திரைத்துறையில் திரைப் பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் என அடுத்தடுத்து பலரும் மரணம் அடைவதை மக்கள் அதிர்ச்சியுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனின் தந்தை கே.டி. சந்திரன் மரணம் அடைந்திருக்கிறார்.
சின்னத்திரையில் விதவிதமான உடைகள் மற்றும் அணிகலன்களால் பிரபலமாக அறியப்பட்ட சுதா சந்திரன் தம் தந்தையை தற்போது இழந்து இருக்கிறார்.
சுதா சந்திரன் தந்தை கே.டி.சந்திரன் பிரபல இந்திப் படங்களில் நடித்த நடிகர் என்பதும் அவருக்கு வயது 86 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சுதா சந்திரன், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை குட் பை அப்பா. ... உங்கள் மகள் என்பதில் பெருமிதம் .... நான் உங்கள் கொள்கைகளை, அனுபவத்தை , மதிப்புகளை என் வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை பின்பற்றுவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
