"டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கேன்" விழாவில் உண்மையை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. தனது நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஸ்ரீலீலா.
நடிகை ஸ்ரீலீலா
தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
ஸ்ரீலீலா அடுத்து தமிழில் அறிமுகம் ஆக இருக்கிறார். அவர் அஜித் ஜோடியாக குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
தற்போது சினிமாவின் டாப் நடிகையாக வலம் வரும் இவர் கிஸ் என்னும் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
மகேஷ்பாபுவின் நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதில் இடம்பெற்ற ஒரு பாடலில் இவரின் நடனம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஈர்த்தது. இதனால் தமிழ் சினிமாவில் நடிக்காமலேயே தகக்கென ஒரு தமிழ் ராசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி நிறுவன நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ரீலீலா கலந்துகொண்டார்.
அப்போது அவரிடம் கல்வி குறித்த சில விஷயங்களும், அவருடைய திரை வாழ்க்கையில் குறித்த விஷயங்களும் கேட்கப்பட்டது. அதன் போது நடிகை ஸ்ரீலீலா தான் இன்னும் படித்து கொண்டிருப்பதாகவும் தான் இன்னும் மாணவி தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீலீலாவின் அம்மா மருத்துவராக இருக்கும் நிலையில் அவரும் டாக்டருக்கு படித்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |