மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா! இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீலீலா தற்போது மூன்றாவது குழந்தையை தத்தெடுத்துள்ளார். குறித்த விடயத்தை புகைப்படத்துடன் அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவுக்கு தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் ஸ்ரீலீலா போட்ட குத்தாட்டம் அவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.
தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள புறநானூறு திரைபடத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா.அதன் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இறுதியாக நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் 1500 கோடியை கடந்து வசூல் வெறியாட்டம் ஆடியது.
நடிப்பை தாண்டி பல சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு வரும் ஸ்ரீலீலா மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக ஸ்ரீலீலா அவரது இன்ஸ்டா தளத்தில் அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவுக்கு இணையத்தில் லைக்குகளும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |