நடிகை ஸ்ரீதிவ்யாவின் தற்போதைய நிலைமை.., படவாய்ப்பு குறைந்ததால் இந்த முடிவா?
படவாய்ப்பு குறைந்ததால் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தற்போது நிலைமை குறித்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நடிகை ஸ்ரீதிவ்யா
தமிழ், தெலுங்கு மாற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை தான் ஸ்ரீதிவ்யா.
தமிழில் வெளியான சிவகார்த்திகேயனின் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படம் மூலம் நடித்து தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு 2017ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் ஸ்ரீதிவ்யாவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை.
படவாய்ப்பு குறைந்து கொண்டே வருவதால் தற்போது ஸ்ரீதிவ்யா எடுத்த முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீதிவ்யாவின் முடிவு
தற்போது கார்த்தி தனது 27 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஶ்ரீதிவ்யா, ஸ்வாதி கொண்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா தான் என முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது ஸ்ரீதிவ்யா தான் கார்த்தியின் தங்கையாக நடிக்கிறார்.
ஹீரோயின் ஆக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் தங்கை என்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |