கடுப்பேற்றிய ரசிகர்களின் கருத்து: பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு
பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி தனது சமூகவலைத்தளத்தில் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிடும் ரசிகர்களை பிளாக் செய்து வருகின்றார்.
கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவி-ல் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தான் ஸ்ரீதேவி.
இவர் அந்த தொடர்களை தொடர்ந்து வாணி ராணி, தங்கம், கல்யாண பரிசு, செம்பருத்தி, ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீதேவி தான் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் இவரின் எல்லா பதிவுகளுக்கும் அவரின் மேல் அக்கறை இருப்பது போல காட்டி கொண்டு நெகடிவ்வாக கமெண்ட் செய்து வருவோரை பிளாக் செய்து வருகிறார்.
இது குறித்த அவரின் பதிவில் "தொடர்ந்து நெகடிவ் கமெண்டுகளை பதிவு செய்பவர்களை பிளாக் செய்து வருகிறேன். அதேபோல் தற்போதும் யாராவது நெகடிவ் கமெண்ட் கொடுத்தால் நிச்சயம் பிளாக் செய்வேன். அதற்கு முன்பு நீங்களே போய்விடுங்கள்"என கூறியுள்ளார்.
