தந்தையின் பிறந்த நாளுக்கு மகள் ஸ்ரீதேவி குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்
தமிழ் சினிமாவில் ரிக்ஷா மாமா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
பிரபல முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகளான இவர், ஜீவா நடிப்பில் வெளிவந்த தித்திக்குதே படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதையும் பெருமளவில் கவர்ந்தார்.
தொடர்ந்து,தேவதையை கண்டேன், பிரியமானவளே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தந்தை விஜயகுமாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, குடும்பத்துடன் ஒன்றிணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா, நீங்கள் தான் என் உலகம்., என பதிவிட்டு திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்வதை தெரிவித்துள்ளார்.