40 வயதில் குட் நியூஸ் சொன்ன நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் குட் நியூஸ் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
சோனம் கபூர்
பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமானவர் தான் நடிகை சோனம் கபூர்.
இவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஷோக் மகிஜா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிய பிலின்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதற்கு முன்னர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா திரைப்படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுக் கொண்டார்.
இந்த திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியது.
குட் நியூஸ்
சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் சோனம், தன்னுடைய நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜா கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் சினிமா திரைப்படங்களில் ஆக்டிவாக இருக்கும் சோனம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன் பின்னர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை சரிச் செய்து கொண்டு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சோனம் கபூர் இரண்டாவது தடவையாக கர்ப்பமாக இருப்பதாக பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு இணையவாசிகள் தங்கள் வாழ்த்துக்களை நடிகைக்கு தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |