Photo Album: மஞ்சள் நீராடிய சோபிதா துலிபாலா- வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
திருமணத்திற்கு தயாராகும் சோபிதா துலிபாலாவின் வீட்டு விஷேசத்தில் எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சோபிதா துலிபாலா
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் சோபிதா துலிபாலா. இவர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் மற்ற நடிகர்களை விட சோபிதாவிற்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது. ஒரே படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
இவர் சினிமாவிற்குள் வர முன்னர் “மிஸ் இந்தியா ஃபெமினா” அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து சோபிதா ஒரு இந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். கடந்த 2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 படத்தில் கதாநாயகியாக சோபிதா அறிமுகமானார்.
இதன் பின்னர் செஃப், காலகாண்டி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த சோபிதாவுக்கு தெலுங்கில் 2018ஆம் ஆண்டு ஆத்வி சேஷ் நடித்த கோடாச்சாரி படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
திருமண கொண்டாட்டங்கள்
இந்த நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான கொண்டாட்டங்கள் கடந்த சில நாட்களாக கலைக்கட்டி வருகின்றன.
அந்த வகையில், இன்றைய தினம் சோபிதா துலிபாலா வீட்டில் நடந்த சடங்குகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |