வெள்ளை நிற ஆடையில் தேவைதையாகவே மாறிய சோபிதா துலிபாலா ... குவியும் லைக்குகள்
தற்போது 32 வயதாகும் நடிகை சோபிதா துலிபாலா வெள்ளை நிற ஆடையில் தற்போது வெளியிட்டுள்ள ட்ரெண்டிங் புகைப்படம் இணையத்தில் லைகக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சோபிதா துலிபாலா
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் தான் நடிகை சோபிதா துலிபாலா. ஒரே படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலாவுக்கு முதல் படமே இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 படத்தில் கதாநாயகியாக சோபிதா அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் செஃப், காலகாண்டி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்த சோபிதாவுக்கு தெலுங்கில் 2018ஆம் ஆண்டு ஆத்வி சேஷ் நடித்த கோடாச்சாரி படத்தின் மூலம் வாய்ப்பு அமைந்தது.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது. அதன் பின்னர் இவர் தொடர்பான பல விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ஆடையில் இவர் தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ட்ரெண்டிங்கள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |