கோடை வெயிலில் குழந்தைகளுடன் சினேகா செய்த காரியம்... வைரலாகும் புகைப்படம்
நடிகை சினேகா கோடை கால வெயிலை சமாளிக்க குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, 2000ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்பு தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். பின்பு ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஏப்ரல் மாதத்தில் என பல படங்களில் நடித்து அசத்தினார்.

நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் நடித்த போது அவரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர். அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் காணொளியினையும், குழந்தைகளுடன் இருக்கும் காட்சியினையும் வெளியிட்டு வருகின்றார்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக பொழுதை கழித்துள்ளார்.




| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |