44 வயதிலும் முன்னணி நடிகைகளை தோற்கடிக்கும் நடிகை சினேகா... வெளியான அட்டகாசமான காட்சி
நடிகை சினேகா தனது 44 வயதிலும் இளமையாக காணப்படும் அடுத்த காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, 2000ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார்.
பின்பு தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின்மூலம் அறிமுகமானார். பின்பு ஆனந்தம், உன்னை நினைத்து, வசீகரா, ஏப்ரல் மாதத்தில் என பல படங்களில் நடித்து அசத்தினார்.

நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் நடித்த போது அவரைக் காதலித்து 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யாந்தா என்ற மகளும் உள்ளனர்.
அவ்வப்போது சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் கோடை விடுமுறையை சமீபத்தில் கொண்டாடி முடித்தனர்.
சினேகா தனது அடுத்த வேலையினை ஆரம்பித்துவிட்டார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் Dance Jodi Dance நிகழ்ச்சியில் நடுவராக இருக்கின்றார். இதற்காக இவர் அணிந்து வந்த உடை பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
அதாவது இவருக்கு வயது 44 ஆனாலும் இளம் முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தனது அழகை பராமரித்து வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |