நடிகர் சிவாஜியின் முதல் படத்தின் படப்பிடிப்பு தளத்தை பார்த்திருக்கீங்களா? அரிய புகைப்படம் இதோ
நடிகர் திலகம் பராசக்தி படத்தில் படப்பிடிப்பின் போது நிறைய திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
நடிகர் திலகம் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பன்முகத் திறமையால் இன்றும் திரையுலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனக்கான கதாபாத்திரங்களை தத்துரூபமாக நடித்து அதில் வாழ்ந்து காட்டும் நடிகர் திலகம் மூன்று தலைமுறை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர்.
250 படங்களுக்கு மேல் கதாநாயகனாகவும் நடித்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான். தேசிய திரைப்பட விருது தாதா சாகிப் பல்கி விருது உள்ளிட்ட பல பெருமைகள் சிவாஜி கணேசனை வந்து சேர்ந்துள்ளது.
இவர் 1952 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பராசக்தியின் மூலம் தான் அறிமுகமானார். கிருஷ்ணன் - பஞ்சு என இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிக் கொடுத்திருந்தார்.
அந்தப் படத்தில் இவர் மூச்சு விடாமல் பேசும் வசனங்கள் இன்றளவும் உயிர்ப்புடன் வலம் வருகிறது. இந்நிலைகள் நடிகர் திலகம் பராசக்தி படத்தில் படப்பிடிப்பின் போது நிறைய திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சிவாஜியின் படப்பிடிப்பு புகைப்படம்
பராசக்தியை தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து பிரமிப்பை ஏற்படுத்திய இவர், பின்பு 90களில் இவர் நடித்த முதல் மரியாதை படம் இளைஞர்களையும் இவர் பக்கம் ஈர்த்தது.
கமல்ஹாசன் நாயகனாக நடித்த தேவர் மகனில் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. பின்னர் மூன்றாவது தலைமுறை நடிகர் விஜயுடன் ஒன்ஸ்மோர், தொடர்ந்து என் ஆசை ராசாவே, மன்னவரு சின்னவரு உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் வேடங்கள் தரித்திருந்தார்.
கடைசியாக சூப்பர் ஸ்டாரின் படையப்பா படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்து அசத்தியிருந்த சிவாஜி கணேசன் 1999 ஆம் ஆண்டு இப் பூவுலகை விட்டு மறைந்தார்.
அவர் மறைந்தாலும் அவரது நடிப்பால் உண்டான புகழ் ரசிகர்கள் உள்ளவரை மறைய போவதில்லை. தற்போது சிவாஜி முதன்முதலாக நடித்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.