நடிகை சிம்ரனின் மகன்களா இது? அடையாளம் தெரியாமல் நல்லா வளர்ந்துட்டாங்களே
1990களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்த சிம்ரனின் மகன்கள் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம்வந்த நடிகை சிம்ரன். பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து பிரபலமானார்.
ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ரஜினிகாந்த் உடன் நடிக்காமல் இருந்தார்.
பின்பு பேட்டை படத்தின் மூலம் அவருடன் நடித்திருந்தார்.தற்போது 47 வயதாகும் சிம்ரன் நடிப்பில் இன்னும் பிஸியாகவே இருந்து வருகின்றார்.
சப்தம், துருவ நட்சத்திரம், வணங்காமுடி மற்றும் அந்தகன் போன்ற இவர் நடித்த படங்கள் வெளியாக உள்ளது.
அடையாளம் தெரியாமல் வளர்ந்த மகன்கள்
நடிகை சிம்ரன் கடந்த 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டதுடன், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அவ்வப்போது தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது வெளியான புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஆம் சிறுவனமாக இருந்த இவரது மகன்கள் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு நன்றாக வளர்ந்து விட்டனர். குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |