49 வயதிலும் இப்படியா? புதிய தோற்றத்தில் நடிகை சிம்ரன்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நடிகை சிம்ரன் 49 வயதிலும் குறையாத இளமையுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான லுக்கில் சேலை அணிந்து தற்போது வெயியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் VIP படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.

விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக நாயகியாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குழந்தைகள் உள்ள நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகை சிம்ரன் ட்ரெண்டிங் சேலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |