முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன்! உணர்வுபூர்வ பதிவு வைரல்!
தளபதி விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதிலிருந்து, திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகை சிம்ரன், தனது குடும்பத்துடன் முதலமைச்சர் விஜயை சந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகியுள்ளது.

நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் VIP திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர், வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

விஜய், அஜித், கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
கதாநாயகி, குணச்சித்திர நடிகை, வில்லி என பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட சிம்ரன், குடும்ப வாழ்க்கையுடன் இணைந்து திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சிம்ரனுக்கு அதீப் பக்கா மற்றும் ஆதித் பக்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள். திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் அவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் முதலமைச்சர் விஜயை சந்துள்ள சிம்ரன் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில், உருக்கமான பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

சிம்ரன் தனது பதிவில், பல வருடங்களுக்குப் பிறகு திரையில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்கலை என் குடும்பத்துடன் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பலரையும் அவர்பால் ஈர்த்த அவரது அன்பு, பணிவு மற்றும் நேர்மை அப்படியே தொடர்கிறது! நமது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான அவரது பேரார்வமும் தொலைநோக்குப் பார்வையும் ஊக்கமளிக்கின்றன. அவர் தமிழகத்தை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் இவ்வேளையில், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவும் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |