கிழிந்த பேண்டுடன் சிம்ரன் வெளியிட்ட காணொளி... என்னாச்சு என விசாரிக்கும் ரசிகர்கள்
நடிகை சிம்ரன் கிழிந்த பேண்டு அணிந்து கொண்டு தகதகவென ஆடவா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90களில் கனவுக்கன்னியாக வலம்வந்த நடிகை சிம்ரன், 1997ம் ஆண்டு வெளியான ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்பு பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களிலும் நடித்தார்.
மும்பையிலிருந்து வந்தவராக இருந்தாலும், புடவை கட்டினால் அச்சு அசல் தமிழ்நாட்டு பெண் போன்று தான் காணப்படுவார்.
தனது இயல்பான நடிப்பினால் பல விருதுகளையும் வாங்கியுள்ள இவர், தனது சிறு வயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சில ஆண்டுக்கு பின்பு மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி ரிவி நிகழ்ச்சியினை தயாரிக்கவும், நடுவராகவும் பங்கேற்ற இவர் வேறொரு பிசினஸ் செய்து வருகின்றார்.
ஆட்டம் போட்ட சிமரன்
தற்போதும் சபதம், வணங்காமுடி, அந்தகன், துருவ நட்சத்திரம் ஆகிய படத்தினை கைவசம் உள்ளது. தமிழ் சினிமாவில் சிம்ரன் மகனும் விரைவில் நடிக்க வருவார் என்று கூறப்படுகின்றது.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் செம்ம ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் தற்போது பழைய பாடலில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட 'தக தகதகவென ஆடவா' பாடலுக்கு கிழிந்த பேண்டில் அவரின் ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |