14ஆவது திருமண நாளை கொண்டாடும் ஸ்ருதிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
திருமண வாழ்க்கையில் 13 வருடங்களை பூர்த்திச் செய்த ஸ்ருதிகாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ருதிகா
தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியாக அறியப்பட்டவர் தான் நடிகை ஸ்ருதிகா.
இவர், சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலங்களில் சில படங்கள் நடித்துள்ளார். அந்த படங்கள் பெரிதாக வரவேற்கப்படாத காரணத்தினால் சினிமா பக்கம் இருந்து விலகி இருந்தார்.
அர்ஜீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்கள்.
இப்படி குடும்பம், குழந்தை என இருந்த ஸ்ருதிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ-என்றி கொடுத்தார்.
அதில் அவர் டைட்டில் வின்னராகவும் தெரிவுச் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, ஸ்ருதிகா அர்ஜூன் தற்போது தொழில்முனைவோர் துறையில் தனக்கென ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளார்.
அவரது நிறுவனமான ஹேப்பி ஹெர்ப்ஸ்(Haappy Herbs), இயற்கை ஆயுர்வேத சரும பராமரிப்பு சந்தையில்(natural, Ayurvedic skincare) முன்னணி நிறுவனமாக உருவெடுத்து, உலகளவில் வாடிக்கையாளர்களின் மனதை வென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியிலும் முக்கிய போட்டியாளராக பங்கேற்ற ஸ்ருதிகா சுமாராக 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், ஸ்ருதிகா அர்ஜூன் இன்றைய தினம் அவருடைய 14 ஆவது திருமண நாளை அவரது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார்.
திருமண நாளையோட்டி அவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், பல துறைகளில் சாதித்து வரும் ஸ்ருதிகா அர்ஜூனிடம் சுமாராக 42 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஸ்ருதிகாவிற்கு ஒரு வாரத்திற்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
சின்னத்திரையில் தனி பெண்ணாக பல சாதனைகளை செய்து வரும் ஸ்ருதிகாவிற்கு அவரது ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |